இச்சங்கத்தின் பெயர், "அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம்" எனத் தமிழிலும், "ALL INDIA DEVANGAR SRI SOWDESWARI SERVICE ASSOCIATION" என ஆங்கிலத்திலும் வழங்கிவரும்.



அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம் கீழ்கண்ட நோக்கங்களைக் கொண்டதாகும்.
இது ஒரு சமூகநல மன்றமாகும். தேவாங்க சமூகத்தின் ஒருங்கிணைந்த முன்னேற்றம் கருதி, இச்சமூகத்தின் எல்லா அங்கத்தினர்களையும் ஒரே கட்டுக்கோப்பின்கீழ் அணைத்துக்கொள்வது. மேலும் இயன்றவரையிலும் இதர சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடுவது.
பல்வேறு ஊர்களில் இச்சமூக பொதுநலனுக்காக அமைக்கப்பட்டு இயங்கிவரும் சங்கங்களை இணைத்த மத்திய அமைப்பாக இம்மன்றத்தை உருவாக்கிக்கொள்வது. மேலும் இனிமேல் ஏற்படும் சங்கங்களையும் இணைத்து இயங்குதல்.
இச்சமூகத்தின் எல்லா அங்கத்தினர்களுக்கும் ஒற்றுமை உணர்வு, சகோதர மனப்பான்மை, நல்ல உடல்நலம், சமுதாய உணர்வு, பொருளாதார முன்னேற்றம், கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு, நாகரீகமான வாழ்க்கைமுறைகள், தெய்வபக்தி, தன்னம்பிக்கை ஆகியவைகளை பெற்றுத்தரும் வழிவகைகளை அமைத்துக்கொடுப்பது.
பாரத நாட்டின் ஏனைய சமுதாயங்களுடன் ஒற்றுமையுடன் சமன்நிலையில் செயல்பட்டு, நாட்டின் பொது முன்னேற்றத்தை குறியாகக்கொண்டு முன்மாதிரியான குடிமக்களாக வாழ்வழி காட்டுவது.
இச்சமுதாயத்தின் தனிப்பட்ட அங்கத்தினர்கள், சமூக அமைப்புகள் ஆகியவர்களின் ஊக்க சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, சமூகத்தின் பொது நன்மைக்காக பயன்படுத்துதல், இதர சமுதாயங்கள், அரசாங்கம் ஆகியவைகள் அளிக்கும் வாய்ப்புக்களையும் தக்கமுறையில் பயன்படுத்திக்கொள்ளுதல்.
தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களிலும் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றங்களை நிறுவி நடத்துதல். இந்த மன்றங்களில் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விடுதிவசதிகள் அமைத்துக்கொடுத்தல். இளையோர்களுக்கு கல்வி முன்னேற்றத்திற்காகவும், வேலைவாய்ப்புக்களைப் பெறுவதற்காகவும், பயிற்சி வகுப்புகளை நடத்துதல், உடற்பயிற்சி அளித்தல், புத்தகசாலைகளை வைத்துப்பராமரித்தல், வல்லுநர்களைக்கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்துதல் ஆகிய பொறுப்புகளை மேற்கொள்ளுதல்.
பொதுப்பாடசாலைகள், தொழிற்கல்விச்சாலைகள், மருத்துவ விடுதிகள், கல்லூரிகள் ஆகியவைகளை ஏற்படுத்துவதும், நடத்துவதும்.
நெசவுத்தொழில் முன்னேற்றத்திற்காக அங்காங்கு பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக்கூடங்கள் ஏற்படுத்துவதும், நடத்துவதும்.
பதிவு பெற்றது · பதிவு எண். 56/1978, வட சென்னை
இச்சங்கத்தின் பெயர், "அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம்" எனத் தமிழிலும், "ALL INDIA DEVANGAR SRI SOWDESWARI SERVICE ASSOCIATION" என ஆங்கிலத்திலும் வழங்கிவரும்.
அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தின் செயலகம், வடசென்னை மாவட்டப் பதிவாளர் வரையறைக்குட்பட்ட சென்னை ஜார்ஜ் டவுன், வீரப்பா இல்லம், இரமணன் தெரு, 24-ஆம் எண் கட்டிடத்தில் இருந்துவரும். மன்றத்தின் அலுவலக நேரம் காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 3.00 மணி முதல் 8.00 மணி வரையும் ஆகும்.
இந்தச் சங்கம் 18.03.1978-ஆம் நாள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த மன்றத்தின் நோக்கங்களும், செயல்முறைகளும் அறிக்கையில் (Memorandum) கண்டுள்ளவாறு.
14-9-1980 அன்று சேலம் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட துணை விதிகள்.
துணை விதிகள் 13, 14, 15 நீக்கப்பட்டது.
தேர்தல் ஆணையாளர்: வட்டாரக் குழு மற்றும் தலைமைச் செயற்குழு ஆகியவற்றின் தேர்தல்களை நடத்தி வைத்திட தலைமைக் குழு தேர்தல் ஆணையாளர்களை நியமிக்கும். தேர்தல் ஆணையாளருக்கு உதவி செய்திட தேவையான உதவியாளர்களை ஆணையாளரே நியமித்துக் கொள்வார். தேர்தல் சம்பந்தமாக எழும் எல்லா பிரச்சனைகள் மீதும் தேர்தல் ஆணையாளரின் முடிவே இறுதியானது.
நாடு முழுவதும் பரவியுள்ள மன்ற அமைப்பு
ஒவ்வொரு வட்டாரமும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளால் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு வட்டாரக் குழுவும் பதினைந்து பேரைக் கொண்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வட்டார அவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறது.